விஜய்யை இயக்க விரும்பும் இயக்குனர் மாரி செல்வராஜ்!
ADDED : 827 days ago
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள மாமன்னன் படம் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், நான் சிறு வயதில் இருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகராக இருந்தேன். பள்ளியில் படித்த காலங்களில் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்தேன். அதனால் இயக்குனர் ஆனதில் இருந்தே விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வருகிறது. அதன் காரணமாக விஜய்யை ஒருமுறை சந்தித்தபோது அவரிடத்தில் ஒரு கதை சொன்னேன். அதைக் கேட்டு அவர் ஷாக் ஆகிவிட்டார். என்றாலும் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று அவருக்காக கதை தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்த படம் சமூகம் சார்ந்த சமூகத்திற்கு தேவையான ஒரு கதையில் உருவாகும் என்கிறார் மாரி செல்வராஜ்.