நீ இல்லாமல் நான் என்ன செய்திருப்பேன் : செல்வராகவன் நெகிழ்ச்சி
ADDED : 826 days ago
நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்த இயக்குனர் செல்வராகவன் கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் விவாகரத்து ஆன பிறகு, கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் தங்களது 13வது திருமண நாளை ஒட்டி சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டு உள்ளார் செல்வராகவன். அந்த பதிவில், ‛‛உன்னுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்தது சிறப்பான நாட்கள். நீ இல்லாமல் இந்த 13 ஆண்டுகளில் நான் என்ன செய்திருப்பேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பான நபர் நீ. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்'' என்று பதிவிட்டு மனைவி கீதாஞ்சலி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.