குடும்பத்துடன் சுற்றுலா சென்ற சூர்யா
ADDED : 826 days ago
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது மனைவி ஜோதிகா மற்றும் மகன், மகளுடன் டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார் சூர்யா. அங்குள்ள பரோ தீவில் அவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் ஜோதிகா. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அங்கு அவர்கள் பொதுவெளியில் அமர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டியது, போட்டில் சென்றது, மலைப்பகுதிக்கு சென்றது, கப்பலில் பயணித்தது, குடும்பமாக டிரக்கிங் சென்றது, உணவருந்தும் புகைப்படம், படகு சவாரி என பல புகைப்படங்கள் தொகுப்பை வீடியோவாக ஜோதிகா வெளியிட்டுள்ளார்.