ஜனநாயகனுக்கு எதிராக விநியோகஸ்தர்கள்: பணத்தை திரும்பி கேட்கிறார்களா?
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் சென்சார் பிரச்னையால் இன்னமும் ரிலீஸ் ஆகவில்லை. ஜனநாயகன் ரீ சென்சார் நடப்பதாக இருந்தது, அதுவும் நடக்கவில்லை. தேர்தலுக்கு பின்னரே படம் ரிலீஸ் என்று சொல்லப்படுகிறது. இதனால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். ஜனநாயகன் தமிழக உரிமை 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் காத்திருப்பது வீண், வட்டி அதிகமாகிறது. அதனால் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிவிடலாம் என சில விநியோகஸ்தர்கள் நினைக்கிறார்களாம்.
ஒரு சிலர் இன்னும் சில மாதம் காத்திருக்கலாம் என யோசிக்கிறார்களாம். இப்போது விநியோகஸ்தர்கள் மூலமும் பிரச்னை வருவதால் படக்குழு கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம். த.வெ.க ஆட்சியை பிடிப்பது மாதிரி தெரியவில்லை. வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஜனநாயகன் ரிலீசில் பிரச்னை வர வாய்ப்பு. போட்ட பணத்தை எப்படி எடுக்க போறோமோ என பல விநியோகஸ்தர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.