எல்.ஜி.எம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் தோனி!
ADDED : 1033 days ago
கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது தயாரிப்பு நிறுவனம் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் படமாக தயாராகி வரும் படம் 'எல் ஜி எம்'. ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்திலிருந்து டீசர், பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் மகேந்திர சிங் தோனி அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி இருவரும் கலந்து கொள்கின்றனர் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.