உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பண்ணை வீடு வாடகைக்கு... நடிகர் உபேந்திரா அறிவிப்பு

பண்ணை வீடு வாடகைக்கு... நடிகர் உபேந்திரா அறிவிப்பு

பெங்களூரு : பிரபல கன்னட நடிகர் உபேந்திரா, 54. ஏ, நாகரஹாவு, ரக்த கண்ணீரு, புத்திவந்தா, சூப்பர் உட்பட பல ஹிட் படங்களில் நடித்தவர். உத்தம பிராஜிகீயா கட்சியை நிறுவி, அதன் தலைவராகவும் செயல்படுகிறார். இவருக்கு, மைசூரு சாலையின் பெரிய ஆலமரம் அருகில், 4 ஏக்கரில் பண்ணை உள்ளது. அதில் பிரமாண்டமான பங்களா கட்டி உள்ளார்.

பச்சை பசேல் என காணப்படும் இந்த வீட்டை, 'திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள், திருமண ஆண்டு விழா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் கொண்டாட வாடகைக்கு தரப்படும்' என்று உபேந்திரா, 'டுவிட்டர்' பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் பண்ணை வீட்டின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !