மேலும் செய்திகள்
சிம்பு மீது அதிருப்தியில் தமன்?
810 days ago
மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி
810 days ago
முன்னணி ஸ்டன்ட் இயக்குனர்களில் ஒருவர் ஸ்டன்ட் சிவா. கடந்த 25 ஆண்டுகளில் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டை இயக்குனராக பணியாற்றி உள்ளார். சமீபத்தில் ருத்ரன், விடுதலை, கஸ்டடி ஆகிய படங்களில் பணியாற்றினார்.
இந்த நிலையில் தற்போது இவரின் மகன் கெவின் குமார் விரைவில் ஸ்டன்ட் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தனது தந்தையுடன் இணைந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஆக்சன் காட்சிகளில் பணியாற்றியதுடன் அதன் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டு வந்தார் கெவின்.
கடந்தாண்டு தெலுங்கில் வெளியான பாலகிருஷ்ணா நடித்த 'அகாண்டா' மற்றும் தற்போது தயாராகி வரும் ரஜினியின் ஜெயிலர் ஆகிய படங்களில் ஒருசில சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார் கெவின் குமார். இவர் வடிவமைத்த சண்டைக்காட்சியின் நேர்த்தியை பார்த்து ரஜினி பாராட்டி உள்ளார்.
810 days ago
810 days ago