ராஷ்மிகாவிற்கு பதிலாக ஸ்ரீலீலா?
ADDED : 854 days ago
தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிதின். அடுத்து வெங்கி குடுமுலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த நிலையில் ராஷ்மிகா தற்போது ஜந்து படங்களில் பிஸியாக நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டு இப்போது நிதின் படத்தை விட்டு விலகியுள்ளார். இதனால் இப்போது இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ஸ்ரீலீலா தெலுங்கில் மட்டும் அரை டஜன் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.