கங்குவா படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்!
ADDED : 1043 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, நட்ராஜ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இன்று நள்ளிரவில் இப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி சில மணி நேரத்தில் யூடியூப்பில் மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்ட்டிங் ஆகி வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நட்ராஜ் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.