மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
777 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
777 days ago
'ஜதி ரத்னலு' தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் பரியா அப்துல்லா. அதன்பிறகு 'லைக் அண்ட் ஷேர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'தி ஜங்கபுரு கர்ஸ்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இது பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள வெப் தொடர். இதில் அவருடன் சுகதேவ் நாயர், நாசர், மகரந்த் தேஷ்பாண்டே, தீபக் சம்பத் மற்றும் ஹிதேஷ் தேவ். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரை ஸ்டுடியோ நெக்ஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நிலா மதாப் பாண்டா இயக்கி உள்ளார். பாலோ பெரெஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலோகானந்தா தாஸ்குப்தா மற்றும் துர்கா பிரசாத் மொஹபத்ரா ஆகியோர் இசை அமைத்துள்ளனர். மலைவாழ் பூர்வகுடி மக்களை விரட்டி அடித்துவிட்டு அங்கு சுரங்கம் வெட்டும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையிலான போராட்டத்தை சொல்லும் தொடராக உருவாகி உள்ளது. இந்த தொடர் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாகிறது.
777 days ago
777 days ago