உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த் முன் நடனம் : தமன்னா மகிழ்ச்சி

ரஜினிகாந்த் முன் நடனம் : தமன்னா மகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், தமன்னா, மற்றும் பலர் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 'ஜெயிலர்' படத்தில் இடம் பெற்றுள்ள 'காவாலா' படத்திற்காக மேடையில் நடனமாடினார் தமன்னா. நிகழ்ச்சி முடிந்த பின் அந்தப் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

“காவாலா' பாட்டை மிகவும் ரசித்த அற்புதமான ரசிகர்கள் முன்னிலையில் நடனமாடியது மகிழ்ச்சியில் மூழ்கடித்தது. ரஜினிகாந்த் சார் பார்வையாளராக இருந்தது அதை விட சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. அது புல்லரிப்பைத் தந்தது. 'காவாலா' பாடலுக்காக நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து உங்களுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

'காவாலா' பாடல் யு டியுபில் 84 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இதன் ஹிந்திப் பாடலான 'து ஆ தில்பரா' பாடலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !