கண்ணே கலைமானே படத்திற்கு கிடைத்த மற்றும் ஒரு விருது
ADDED : 813 days ago
கடந்த 2019ம் ஆண்டில் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த திரைப்படம் கண்ணே கலைமானே. இப்படம் விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றது. வசூல் ரீதியாக பெரிதாக வசூலிக்கவில்லை. அதேசமயம் பல பட விழாக்களில் பங்கேற்று விருது வென்றது. ஏற்கனவே நடைபெற்ற இந்திய பிரெஞ்சு திரைப்பட விழாவில் கண்ணே கலைமானே படத்திற்கு சிறந்த நடிகை தமன்னா, சிறந்த துணை நடிகை வடிவுக்கரசி, சிறந்த தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என மூன்று விருதுகளை குவித்தது. இதை தொடர்ந்து தற்போது 17வது அமெரிக்க சோகால் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ' சிறந்த படத்திற்கான விருதை வென்றுள்ளது' . மேலும் வருகின்ற செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.