விஷ்வாக் சென் 11 படத்தின் தலைப்பு அறிவிப்பு
ADDED : 799 days ago
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர் மற்றும் நடிகரான விஷ்வாக் சென் தற்போது அவரின் 11வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணா சைதன்யா இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கு படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. சித்தாரா என்டர்டெயின்ட்மெண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ' கேங்க்ஸ் ஆப் கோதாவரி' என்கிற தலைப்பு உடன் இப்படத்திலிருந்து க்ளிம்ஸ் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது.