அரசியல் கதையில் நாயகனாக நடிக்கும் செல்வராகவன்
ADDED : 799 days ago
சாணிக் காயிதம், பீஸ்ட் உள்பட பல படங்களில் நடித்த இயக்குனர் செல்வராகவன், தற்போது ரெங்கநாதன் என்ற அறிமுக இயக்குனரின் படத்தில் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தென்னிந்திய அரசியலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இதில் அவருடன் யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் இயக்குனர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகமாகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், ராமநாதபுரம், கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் நடிகர் நடிகைகள் டெக்னீஷியன்கள் குறித்த தகவல் வெளியாக உள்ளது.