உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மீது கிரிமினல் வழக்கு : எதற்கு தெரியுமா?

எதிர்நீச்சல் மாரிமுத்துவின் மீது கிரிமினல் வழக்கு : எதற்கு தெரியுமா?

எதிர்நீச்சல் தொடரின் மூலம் டிரெண்டிங் நடிகராக வலம் வரும் மாரிமுத்து. மனதில் பட்டதை பொதுவெளியில் ஓப்பனாக பேசக்கூடியவர். அவர் கொடுத்த பல நேர்காணல்களில் யாருக்கும் பயப்படாமல் வெளிப்படையாக பல கருத்துகளை கூறியுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஒரு விவாத நிகழ்ச்சியில் மாரிமுத்து ஜோதிடர்களுக்கு எதிராக அடுக்கடுக்காக பல கருத்துகளை கூறி எதிர்தரப்பினரை வாயடைத்தார். அந்த வீடியோவானது தொடர்ந்து சில நாட்களாக சோஷியல் மீடியாக்களில் வைரலானது. தற்போது அந்த வீடியோவை பார்த்த பழ.ஆறுமுகம் என்ற நபர் மாரிமுத்துவின் கருத்துகளை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என கூறி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீஸுக்கு மாரிமுத்து 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க தவறும் பட்சத்தில் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !