உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளைஞர் பைக் மீது கார் மோதிய விபத்தில் நகைச்சுவை நடிகர் மீது வழக்கு பதிவு

இளைஞர் பைக் மீது கார் மோதிய விபத்தில் நகைச்சுவை நடிகர் மீது வழக்கு பதிவு

மலையாள திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் நேற்று முன் தினம் தனது காரில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இப்போது எதிரே இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இளைஞருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் எதுவும் இன்றி தப்பிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மருத்துவமனைக்கு உடன் சென்று அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுராஜ் வெஞ்சாரமூடு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !