ஜெயிலர் படத்தில் 11 இடங்களில் கைவைத்த சென்சார் போர்டு
ADDED : 797 days ago
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகி உள்ள ‛ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் போஸ்டர் மற்றும் இரண்டாவதாக வெளியான ஹூக்கும் பாடல் ஆகியவற்றைப் பார்க்கும்போது இந்தப்படம் ஆக்சன் கதையாக இருக்கும் என யூகிக்க முடிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் சில காட்சிகளை வெட்டவும் சில காட்சிகளில் வசனங்களை சத்தமில்லாமல் மியூட் செய்யவும் கூறி 11 இடங்களில் மாற்றம் செய்ய சொல்லி உள்ளனர். அவையெல்லாம் ஓரளவுக்கு சரி செய்த பின்னர் தான் படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்று அளித்துள்ளனர்.