நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு மட்டும் தான்.... - ரஜினியின் ‛ஜெயிலர்' டிரைலர் வெளியீடு
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‛ஜெயிலர்'. அவருடன் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, தமன்னா, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்டோருடன் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ஆக., 10ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலரை 'ஷோகேஸ்' என்ற புதிய பெயரில் வெளியிட்டனர்.
‛‛ஒரு அளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சு கிடையாது வீச்சு மட்டும் தான்.... ரொம்ப தூரம் போயிட்டேன் புல்லா முடிச்சுட்டு தான் திரும்ப வருவேன்...'' ஆகிய வசனங்கள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. ரசிகர்களை கவர்ந்துள்ள இந்த டிரைலர் வெளியான அரைமணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று டிரெண்ட் ஆனது.