ஹீரோயினாக அறிமுகமாகும் இலங்கை தமிழ் பெண்
ADDED : 797 days ago
'காக்கா முட்டை' படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்த விக்னேஷ், ரமேஷ் இருவரும் கதை நாயகர்களாக நடிக்கும் படம் 'புது வேதம்'. இதனை ராசா விக்ரம் இயக்குகிறார். இந்த படத்தில் விக்னேஷ் ஜோடியாக நடிக்கிறார் வருணிகா.
இவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர். அங்கு உள்நாட்டு போர் நடந்தபோது அங்கிருந்து குடும்பத்துடன் சென்னை வந்து இங்கு செட்டிலானார். நடிப்பு மீது ஆசை கொண்ட வருணிகா சினிமா ஆடிசன்களில் கலந்து கொண்டு சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இப்போது புதுவேதம் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.
சென்னையில் உள்ள குப்பை மேடுகளில் வாழும் மக்களை பற்றிய கதை இது. இதில் அவர் அந்த பகுதியில் வாழும் ஏழைப் பெண்ணாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதம் வெளிவருகிறது.