புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் கேங்ஸ்டர் படம்
ADDED : 816 days ago
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் எஸ்.கே.எம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்று இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'போத்தனூர் தபால் நிலையம்', 'நட்சத்திரம் நகர்கிறது' ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று படத்தின் துவக்க விழா நடந்தது. திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.