விமல் நடிக்கும் புதிய வெப் தொடர்
ADDED : 793 days ago
நடிகர் விமல் தொடர் தோல்வியில் இருந்தபோது கடந்த வருடத்தில் வெளிவந்த ' விலங்கு' என்ற வெப் தொடர் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த தொடர் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்போது இரண்டாவது முறையாக வெப் தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனை என்கிட்ட மோதாதே பட இயக்குனர் ராமு செல்லப்பா இயக்குகிறார். இதில் பாவினி, திவ்யா துரைசாமி இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர்.
ரிவன்ஞ் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருநெல்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.