நடிகர் வெற்றியின் புதிய பட ரிலீஸ் அப்டேட்
ADDED : 798 days ago
வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து வெற்றி, தோல்விகளை கடந்து நடித்து வருகிறார் நடிகர் வெற்றி. கடைசியாக இவர் நடித்து வெளிவந்த 'பம்பர்' படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது வெற்றி நடித்து முடித்துள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, கே.ஜி.எப் . கருடா ராம், தியா மயூரிகா, கணேஷ் வெங்கட்ராம், கபாலி விஸ்வநாத் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ' ரெட் சேண்டல்'. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜெ.என். சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படம் இம்மாதம் (ஆகஸ்ட்) வெளியாகும் என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், ரிலீஸ் தேதியை குறிப்பிடவில்லை.