உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுதந்திர தினத்திற்கு வெளியாகும் சிவகார்த்திகேயன் பட பர்ஸ்ட் லுக்

சுதந்திர தினத்திற்கு வெளியாகும் சிவகார்த்திகேயன் பட பர்ஸ்ட் லுக்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார் . கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் . கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

இப்படம் ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இது இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !