மேலும் செய்திகள்
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
787 days ago
செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ'
787 days ago
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
787 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், வடிவேலு மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'மாமன்னன்'. இப்படத்தின் ரத்தினவேல் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் மலையாள நடிகரான பஹத் பாசில் நடித்திருந்தார். அவருடைய வில்லத்தனமான நடிப்பிற்கு விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் பாராட்டுக்கள் கிடைத்தது.
ஓடிடியில் படம் வெளிவந்த பிறகு ரத்தினவேல் கதாபாத்திரத்தை ஒரு குறிப்பிட்ட சாதி தரப்பினர் கொண்டாட ஆரம்பித்தனர். தொடர்ந்து அந்தக் கதாபாத்திரம் பற்றிய பதிவுகளைப் பதிவிட்டு தொடர் டிரெண்டிங்கிலும் பஹத் பாசிலை இருக்க வைத்தனர். அதுவும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு ஒரு நீண்ட வாழ்த்துகள் சொல்லி அந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளார் மாரி செல்வராஜ்.
“வணக்கம் பஹத் சார்!!!
உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அந்த இரண்டு கண்களை வைத்துதான் என் ரத்தினவேல் கதாபாத்திரத்தை உருவாக்கினேன்.
ஒரு கண்ணில் பல தலைமுறைகளாக சொல்லிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கைமுறை சரி என்ற நம்பிக்கையை தீர்க்கமாக வையுங்கள் என்றேன். மற்றொரு கண்ணில் புதிய தலைமுறைகள் முளைத்து வந்து கேட்கும் வாழ்வியல் முரணுக்கான ஆக்ரோஷ கேள்விகளையும் குழப்பங்களையும் வையுங்கள் என்றேன்.
மிகச்சரியாக இரண்டு கண்களிலும் இரண்டு நேரெதிர் வாழ்வை வைத்து என் படம் முழுக்க அப்படியே பயணித்தீர்கள். இறுதியாக இரண்டு கண்களையும் மூட சொன்னேன். ஏனென்று கேட்காமல் மூடினீர்கள்.
உங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் டாக்டர்.அம்பேத்கரின் குரலை ஒங்கி ஒலிக்க விட்டேன். அவ்வளவுதான் உடல் சிலிர்த்து நீங்கள் ஓடிவந்து என்னை அணைத்துக்கொண்ட அந்த நொடி தீரா பரவசத்தோடு சொல்கிறேன்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பஹத் சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
787 days ago
787 days ago
787 days ago