பான் இந்தியா படத்தை இயக்கும் அர்ஜூன்
ADDED : 845 days ago
நடிகர் அர்ஜூன் தனது ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் மூலம் தயாரிக்கும் 15வது படத்தை அவரே கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். இதனை தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாக்க இருக்கிறார்.
கன்னட நடிகர் உபேந்திராவின் அண்ணனின் மகனான நிரஞ்சன் இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்க, அர்ஜூனும் இணைந்து நடிக்கிறார். கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ஹித்தேஷ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நேற்று முதல் ஐதராபாத்தில் துவங்கியது.