ஆக்ஷன் கதைகளத்தில் ராஜேஷ் எம் செல்வாவின் அடுத்த படம்
ADDED : 1101 days ago
கமல்ஹாசனின் ‛தூங்கா வனம்' மற்றும் விக்ரமின் ‛கடாரம் கொண்டான்' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜேஷ் எம். செல்வா. தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இதில் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் கதைகளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டில்லியில் படமாக்கப்பட உள்ளது. சைமன் கே கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர்.