ஜெயிலரை பார்த்த முதல்வர்
ADDED : 799 days ago
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'ஜெயிலர்'. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார் இந்த படம் கடந்த 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை அடையாறு திரைப்பட வளர்ச்சி கழகத்தின் தியேட்டரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பின்னர் அவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெல்சன் “ஜெயிலர் படத்தை பார்த்து வாழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்களின் ஊக்கமும், பாராட்டுகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.