உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சோசியல் மீடியாவில் தொடர் தாக்குதல் : டொவினோ தாமஸ் போலீசில் புகார்

சோசியல் மீடியாவில் தொடர் தாக்குதல் : டொவினோ தாமஸ் போலீசில் புகார்

மலையாள திரையுலகில் பிஸியான இளம் முன்னணி நடிகராக நடித்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் ‛மாரி 2' படத்தில் வில்லனாக நடித்தார். வித்தியாசமான கதைக்களங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து வெற்றி படங்களாக கொடுத்து வருபவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2018 என்கிற படம் சூப்பர் ஹிட் ஆனது. பெரும்பாலும் யார் மீதும் எந்த வம்புக்கும் போகாதவர் என பெயர் வாங்கியவர் டொவினோ தாமஸ். ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஒரு குறிப்பிட்ட நபர் டொவினோ தாமஸ் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு பரப்பியும் வந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசிபியிடம் நேரிலேயே சென்று புகார் அளித்துள்ளார் டொவினோ தாமஸ். அவரது புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் வசிக்கும் பனங்காடு போலீஸ் ஸ்டேஷனில் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !