உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ முதல் காட்சி டிக்கெட்டை வெளியிட்ட நிவின் பாலி

லியோ முதல் காட்சி டிக்கெட்டை வெளியிட்ட நிவின் பாலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற அக்டோபர் 19ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய்க்கு அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதால், கேரளா மாநிலத்தில் ரசிகர்களுக்கான முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மலையாள நடிகர் நிவின் பாலி கலந்து கொண்டு டிக்கெட்டை வெளியிட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !