வெளியீட்டுக்கு தயாரானது ஹன்சிகாவின் வெப் சீரிஸ்
ADDED : 776 days ago
ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் தற்போது 'MY3 என்ற வெப் தொடரை இயக்கி உள்ளார். இந்தத் தொடரில் சாந்தனு பாக்யராஜ், முகன் ராவ் மற்றும் ஆஷ்னா ஜவேரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர ஜனனி ஐயர், சுப்பு பஞ்சு, ராமர், தங்கதுரை, நிஷா, அபிஷேக், சக்தி, விஜே பார்வதி உள்பட பலர் நடித்துள்ளனர். கணேசன் இசையமைத்துள்ளார். இந்த தொடரின் பணிகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் வெளியாகிறது. தற்போது இதன் புரமோசன் பணிகளை தொடங்கி உள்ளனர்.
பாதி ரோபோவாகவும், பாதி பெண்ணாகவும் இருக்கும் ஹன்சிகாவை சாந்தனு, முகன்ராவ் காதலிப்பதுதான் தொடரின் கதை.