உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்?

மகேஷ் பாபுவிற்கு அம்மாவாக நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்?

த்ரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீலீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா மற்றும் ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்போது ரம்யா கிருஷ்ணன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !