உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் 150 கோடி பட்ஜெட் திரைப்படம்

தனுஷின் 150 கோடி பட்ஜெட் திரைப்படம்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னனி நடிகர்களில் ஒருவர். தற்போது தன் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் புதிய படத்தை தனது வுன்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதைத்தொடர்ந்து இப்படத்தை குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் பட்ஜெட் ரூ. 150 கோடி என கூறப்படுகிறது. இதை தனுஷூடன் இணைந்து மற்றொரு முன்னனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !