‛கிரிமினல்' பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 777 days ago
அறிமுக இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி இயக்கத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் படம் 'கிரிமினல்'. கருணாகரன், ஜனனி, ரவினா ரவி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணி நடைபெற்று வருகிறது. சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.