சூர்யாவின் கங்குவா பட காட்சிகள் வெறித்தனம்! - தேவி ஸ்ரீ பிரசாத் தகவல்
ADDED : 791 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதிபாபு, ஆனந்தராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இவர் புஷ்பா படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கங்குவா படம் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த கங்குவா படத்தின் சில காட்சிகளை நான் சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளும் வெறித்தனமாக இருந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் ஒரு மாறுபட்ட சூர்யாவை பார்க்கலாம். இந்த படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார்.