உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / செப்டம்பர் 7ல் இருந்து லண்டனில் விஜய்யின் லியோ டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!

செப்டம்பர் 7ல் இருந்து லண்டனில் விஜய்யின் லியோ டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய்தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் கதாபாத்திரங்களின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு குறித்த ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது. லியோ படம் அக்டோபர் 19ல் திரைக்கு வரும் நிலையில், 6 வாரங்களுக்கு முன்பே அதாவது செப்டம்பர் 7ம் தேதியிலிருந்து லண்டனில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது. இதனை லியோ படத்தை வெளியிடும் நிறுவனமான அகிம்சா என்டர்டெயின்மென்ட் பிலிம்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !