சிறுவர்களுடன் சைக்கிள் ஓட்டி மகிழ்ந்த அஜித்
ADDED : 772 days ago
துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பின்னர் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இதனையடுத்து ‛தடம்' படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவார் என்றும், அந்த படத்திற்கு ‛விடா முயற்சி' என தலைப்பு வைத்துள்ளதாகவும் கடந்த மே மாதம் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பதாகவும், நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு புனேயில் விரைவில் துவங்க உள்ளது.
முன்னதாக சில மாதங்களாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற அஜித், சமீபத்தில் சென்னை வந்தார். இந்த நிலையில் சிறுவர்களுடன் சேர்ந்து அஜித் சைக்கிள் ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.