உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானியை இயக்கும் டான் பட இயக்குனர்

நானியை இயக்கும் டான் பட இயக்குனர்

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் உருவான படம் டான். லைகா நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை பலரும் கேலி கிண்டல் செய்து வரும் நிலையில் அந்த மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கும் வகையில், இந்த படம் உருவாகி இருந்தது. டான் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ஒரு கட்டத்தில் அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் நானியை வைத்து தனது அடுத்த படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் அவர் இயக்கயிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !