உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் சந்தோஷக் கண்ணீரே : திருமணநாளில் சிவகார்த்திகேயன் பதிவு

என் சந்தோஷக் கண்ணீரே : திருமணநாளில் சிவகார்த்திகேயன் பதிவு

மாவீரன் படத்தை அடுத்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நேற்று அவர் தனது 13வது திருமண நாளை கொண்டாடியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு 2010 ஆகஸ்டு 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தாருடன் தனது 13 வது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அதோடு தனது மனைவியுடன் தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, என் சந்தோஷ கண்ணீரே என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !