தமிழில் 200 தியேட்டரில் வெளியாகும் குஷி
ADDED : 769 days ago
சிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஷம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை இந்த படத்தின் மேல் ஏற்படுத்தியுள்ளது. இப்படம் உலகமெங்கும் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி அன்று வெளியாகிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் ஸ்ரீலட்சுமி மூவிஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தமிழகமெங்கும் 200 தியேட்டர்களுக்கு மேல் தமிழ் பதிப்பில் வெளியிடுகின்றனர். ஒரு சில தியேட்டர்களில் தெலுங்கு பதிப்பும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது .