ரூ.50 கோடியை மீட்டெடுக்குமா 'குஷி'
சிவ நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'குஷி'. இப்படம் தெலுங்கைத் தவிர ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்து கடைசியாக வெளிவந்த 'லைகர்' படம் படுதோல்வியைத் தழுவியது. இருந்தாலும் 'குஷி' படத்தின் டிரைலருக்கும், பாடல்களுக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருப்பதால் இப்படம் எப்படியும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
'குஷி' படத்தின் மொத்த வியாபாரம் ரூ.50 கோடிக்கு நடந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் சுமார் 40 கோடிக்கும், இதர மாநிலங்களில் 5 கோடிக்கும், வெளிநாடுகளில் 7 கோடிக்கும் என மொத்தமாக 52 கோடி வரை நடந்துள்ளதாம். 55 கோடி வரை வசூலித்தால் இப்படம் வியாபார ரீதியாக தப்பிக்க வாய்ப்புள்ளது. இப்படம் வெற்றி பெற்றால்தான் விஜய் தேவரகொண்டா மீண்டும் தனது பழைய பார்முக்கு வர முடியும்.