உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹிட் சீரியலுக்கு எண்ட் கார்டு?

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக ஹிட் சீரியலுக்கு எண்ட் கார்டு?

பிக்பாஸ் சீசன் 7 வருகிற அக்டோபர் மாதம் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதும் மக்களிடம் வரவேற்பை பெறாத சீரியல்களுக்கு எண்ட் கார்டு போட்டு முடித்து வைத்துவிடுவார்கள். அந்த வகையில் இம்முறை எத்தனை சீரியல்களுக்கு எண்ட் கார்டு என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ஆனால், ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியின் ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவுக்கு வந்துவிடும் என சின்னத்திரை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுடன் கண்ணே கலைமானே, காற்றுக்கென்ன வேலி ஆகிய தொடர்களும் முடிவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !