மேலும் செய்திகள்
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
737 days ago
த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி!
737 days ago
நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் சார்பில் விக்டரி வெங்கடேஷ் தயாரிக்கும் பான் இந்தியா படம் 'சைந்தவ்'. சைலேஷ் கொலானு இயக்குகிறார். வெங்கடேஷ், நவாசுதீன் சித்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்த படத்தின் கதை 8 முக்கிய நடிகர்களை சுற்றி நடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏழு கதாபாத்திரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மற்றொரு மிக முக்கிய கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ் தெலுங்கிற்கு ஏற்கெனவே அறிமுகமான ஆர்யா இந்த படத்தில் நடிப்பது அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டு அவரது தோற்றமும் வெளியிடப்பட்டது. பான் இந்தியா திரைப்படமாக 'சைந்தவ்' உருவாகி வருகிறது. இந்த படம் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி மொழிகளில் டிசம்பர் 22ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது.
737 days ago
737 days ago