உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓ.ஜி படத்தின் டீசர் அப்டேட்!

ஓ.ஜி படத்தின் டீசர் அப்டேட்!

சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஓ.ஜி' . பிரகாஷ் ராஜ், பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, இம்ரான் ஹாஸ்மி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி பவன் கல்யாண் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவித்ததை தொடர்ந்து இப்போது #Hungrycheetah டீசர் செப் 2ம் தேதி காலை 10.35 மணிக்கு வெளியாகும் என நேரத்தை குறித்து படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !