மேலும் செய்திகள்
செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா!
734 days ago
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
734 days ago
மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மலையாள திரையுலகில் 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் படம் என்கிற சாதனையையும் லூசிபர் மூலம் பெற்றார். இதைத்தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து புரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.
அதே சமயம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் உருவாக இருக்கிறது என கடந்த இரண்டு வருடங்களாகவே அவர் கூறி வந்தாலும் அவரும் மோகன்லாலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த படத்தை எப்போது துவங்குவது என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரித்விராஜ் இன்னும் வெளியிடவில்லை.
இந்தநிலையில் இந்த படம் விரைவில் துவங்க இருக்கிறது என்றும் அதற்கு முன்னதாக புரோமோ ஷூட் ஒன்றை பிரித்விராஜ் நடத்தப் போகிறார் என்றும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.
“யார் இப்படி ஒரு செய்தியை பரப்பினார்கள் என தெரியவில்லை. லூசிபர் 2 படத்திற்கு புரோமோ ஷூட் பண்ணும் எண்ணமே இல்லை. அதே சமயம் இந்த படத்தை எப்போது துவங்கப் போகிறோம் என்பது குறித்த இன்னும் சில விஷயங்களையும் இந்த மாதமே அறிவிக்கப் போகிறோம்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.
734 days ago
734 days ago