உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரூ.1000 கோடி பிஸ்னஸ்-க்கு தயாராகும் புஷ்பா 2?

ரூ.1000 கோடி பிஸ்னஸ்-க்கு தயாராகும் புஷ்பா 2?

கடந்த 2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'புஷ்பா'. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதே கூட்டணியுடன் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரூ.450 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மொத்த உரிமையும் வடமாநில நிறுவனம் ஒன்று பெரும் தொகை கொடுத்து வாங்க பேசி வருவதாகவும், அதன் விலை ரூ.1000 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !