உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மூன்று மொழிகளிலும் மிரட்டும் 'மார்க் ஆண்டனி' டிரைலர்

மூன்று மொழிகளிலும் மிரட்டும் 'மார்க் ஆண்டனி' டிரைலர்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள படம் 'மார்க் ஆண்டனி. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது.

இப்படத்தின் ஹிந்தி டிரைலர் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கைப் போலவே ஹிந்தி டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. யு டியூபில் தமிழ் டிரைலர் இதுவரையில் 23 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 10 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.

விஷால் நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் அதிகமான பார்வைகளைப் பெற்ற படமாக இந்தப் படம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !