உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனை வைத்து படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்

மகனை வைத்து படம் இயக்கும் நடிகர் சரண்ராஜ்

தமிழில் பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரண்ராஜ். இவர் கடந்த 1999ம் ஆண்டு அண்ணன் தங்கச்சி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். மேலும், ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் ரஜினியின் இஸ்லாமிய நண்பர் வேடத்தில் நடித்திருந்தார் சரண்ராஜ். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது குப்பன் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்குகிறார். இதில் தனது மகன் தேவ்வை ஹீரோவாகவும், சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி ஆகியோரை ஹீரோயின்களாகவும் நடிக்க வைக்கும் சரண்ராஜ், தானும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மீனவ பையனுக்கும், மார்வாடி பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !