ஆல்யாவின் காலில் எவ்வளவு பெரிய தழும்பு?
ADDED : 767 days ago
நடிகை ஆல்யா மானசா சின்னத்திரை நேயர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். இனியா தொடரின் மூலம் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதற்கிடையில் சீரியல் நடிகைகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டபோது ஆல்யாவுக்கு இடது கால் எலும்பு முறிந்தது. அதை சரிசெய்ய அவருக்கு இடது காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இது நடந்து சில மாதங்கள் ஆகிய நிலையில், ஆல்யா அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தில் இடது காலில் இருக்கும் அந்த பெரிய தழும்பை பார்த்து ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து வந்தனர். அது பழையகாயம், ஆல்யா தற்போது நலமாக தான் இருக்கிறார், ஷூட்டிங் செல்கிறார் என்று தெரிய வந்த பின்னர் தான் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.