மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
752 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
752 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
752 days ago
உலக புகழ்பெற்ற மல்யுத்த விளையாட்டு டபிள்யூ டபிள்யூ இ (WWE). இதற்கென்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த விளையாட்டை மட்டும் ஒளிபரப்பும் சேனல்கள் இருக்கிறது. அதிக பணம் புரளும் ஒரு விளையாட்டாகவும் இருக்கிறது. இந்த விளையாட்டு போட்டி இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள காஜிபவுலி உள்விளையாட்டு அரங்கில் 'சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்' என்கிற பெயரில் நடந்தது. இதில் உலக புகழ்பெற்ற வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் ஜான் சீனா. காரணம் அவர் ஹாலிவுட் நடிகரும் ஆவார். 16 முறை சேம்பியன் பட்டம் பெற்றவர்.
இந்த நிலையில் ஐதராபாத் சென்றுள்ள நடிகர் கார்த்தி, ஜான்சீனாவை சந்தித்திருக்கிறார். அந்த படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “ஜான் சீனா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்” என பதிவிட்டுள்ளார்.
கார்த்தியுடன் ஜான் சீனா நடிக்கப் போகிறாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் கார்த்தி, ஜான் சீனாவின் ரசிகர். அதனால் அவரை சந்திதார் என்று கார்த்தி தரப்பினர் கூறுகிறார்கள்.
752 days ago
752 days ago
752 days ago