உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சைரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

'சைரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைரன்'. கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சாந்தினி தமிழரசன், யோகி பாபு, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இன்று (செப்.,10) ஜெயம் ரவி பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு சைரன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதில் ஜெயம் ரவி கைதி தோற்றத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !